• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடற் பயணிகள் போக்குவரத்தினை மேம்படுத்துதல்
- இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடற் பயணிகள் போக்குவரத்தினை மேம்படுத்துவதன் மூலம் இருநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இரு நாடுகளுக்கிடையே பிரவேசிக்கக்கூடிய வாய்ப்பை அதிகளவில் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துதல், விருத்தி செய்யப்பட்ட தொடர்புகள் மூலம் கலாசார பரிமாறல், கல்வி, மத, கலாசார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் சாத்தியம் நிலவுகின்றதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. அதன் பொருட்டு குறைந்த செலவுடன் கூடிய சுற்றுலா மற்றும் போக்குவரத்து கட்டண முறையொன்றினை அறிமுகப்படுத்துவது அத்தியாவசியமானதோடு, அதற்கிணங்க பயணிகள் போக்குவரத்து கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் போன்றவற்றின் மூலம் இலங்கையிலிருந்து வௌியேறும் பயணிகளிடத்திலிருந்து தற்போது அறவிடப்படும் வௌியேறல் வரிகளை முறையே 05 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகவும் 20 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக குறைப்பதற்கும் பயணிகள் கப்பல் மூலம் பயணிக்கும் ஒரு பயணிக்கு கட்டணமின்றி 60 கிலோகிராம் வரை பயணப் பொதிகள் கொண்டு செல்வதற்கான வசதியினை வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.