• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துதல்
- நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டமூலத்திற்கான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் உயர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக செய்யவேண்டி இருந்தமையினால் துறைசார் நிபுணர்களினால் முன்வைக்கப்பட்ட திருத்த பிரேரிப்புகள் இந்த சட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கு இயலாமற்போனது. ஆதலால் உரிய திருத்த பிரேரிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த துறைசார் நிபுணர்களுடன் மேலும் கலந்துரையாடி இனங்காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.