• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கூட்டுறவு சதுக்கம் என்னும் பெயரில் கூட்டுறவு வர்த்தக மையமொன்றை நிர்மாணித்தல்
- கூட்டுறவு சதுக்கம் என்னும் பெயரில் கூட்டுறவு வர்த்தக மையமொன்றை நிர்மாணிப்பது சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பிரேரிப்பானது 2023‑11‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, உத்தேச கருத்திட்டம் தொடர்பில் சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தேசிய அபிவிருத்திக் குழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க தேசிய அபிவிருத்திக் குழுவினால் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. இந்த சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு, திரட்டிய நிதியத்திற்கு செலவுச் சுமையினை ஏற்படுத்தாதவாறு ஆர்வ வௌிப்படுத்தல்களைக் கோரி பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை இனங்கண்டு, அரசாங்க - தனியார் மற்றும் கூட்டுறவு பங்குடமை கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.