• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 ஆம் ஆண்டில் சர்வதேச புனித பகவத் கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துதல்
- இந்து மதத்தினரின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை சம்பந்தமாக மத ரீதியிலான சம்பவங்கள் மற்றும் பகவத் கீதையின் புனித தன்மை என்பன பொருட்டிலான விழாவாக இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ர அபிவிருத்தி சபை வருடாந்தம் புனித பகவத் கீதை மகோற்சவத்தை நடாத்திவருகின்றது. அண்மை ஆண்டுகளில் இந்த விழாவானது வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதோடு, 2024 ஆம் ஆண்டில் சர்வதேச புனித பகவத் கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ர அபிவிருத்தி சபையின் நிதி அனுசரணையில் குறித்த விழாவை 2024‑03‑01 ஆம் திகதி தொடக்கம் 2024‑03‑03 ஆம் திகதிவரை தாமரை தடாக வளாகத்தில் நடாத்தும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.