• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு மீண்டும் பயிற்சியளிப்பதற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை
- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அண்மையில் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுலாவின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு உட்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.