• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மடு வீதி தேசிய பூங்காவில் அமைந்துள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அதன் ஒதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பிரதேசத்தை வனவுயிர் ஒதுக்கு பிரதேசமாக இருப்பதை முடிவுறுத்துதல்
- மடு வீதி சரணாலயத்தின் சட்ட நிலைமையினை மேம்படுத்துவதற்கு இந்த சரணாலயத்தை தேசிய பூங்காவாக தரமுயத்துற்கு வட மாகாண திறமுறை சுற்றாடல் மதிப்பீட்டின் மூலம் செய்யப்படட பிரேரிப்புக்கு அமைவாக குறித்த சரணாயத்தினுள் அமைந்திருத்த குடியிருப்புக்களை ஒதுக்கம் என்னும் நிலைமையிலிருந்து அகற்றியும் அதற்கு அண்மையிலிருந்த வனாந்தர பகுதிகளை உள்ளடக்கி மடு வீதி தேசிய பூங்காவாக 2015‑06‑26 ஆம் திகதியிடப்பட்ட வரத்தமானி அறிவித்தல் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. மடு வீதி தேசிய பூங்கா ஒதுக்கத்தில் மீண்டும் நீண்ட காலமாக பயிர்செய்கைப்பட்டுவரும் வயல் காணிகளாகவும் குடியிருப்புகளாகவும் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசத்தை ஒதுக்கம் என்னும் நிலையிலிருந்து விடுவிக்கவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 56.8 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி 2023‑08‑08 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கம் என்னும் நிலையிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணியினை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வன விலங்கு மற்றும் மரங்கள் கட்டளைச்சட்டத்திலுள்ள வழிமுறையினைப் பின்பற்றி விடுவிக்கும் பொருட்டு வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.