• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாய திருத்தத்திற்குரிய நெறிமுறைக்கான அணுகல்
- சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயம் (சிக்காக்கோ சமவாயம்) சார்பில் இலங்கை 1948 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்டுள்ளதோடு, அதன்படி இந்த சமவாயத்தில் தரப்பு நாடொன்றாக இலங்கை உள்ளது. பறந்து கொண்டிருக்கும் சிவில் விமானமொன்றுக்கு எதிராக தரப்பு நாடொன்றினால் ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு இயலுமாகும் வகையில் சிக்காக்கோ சமவாயத்தை திருத்துவதற்கு 1984‑05‑10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 25 ஆவது பொதுக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, குறித்த இந்த திருத்தமானது 1998‑10‑01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. சிக்காக்கோ சமவாயத்திற்கான குறித்த திருத்தத்திற்குரிய நெறிமுறைக்கு (உறுப்புரை 3 bis) இலங்கை அணுகும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுளளது. 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்திலுள்ள அட்டவணையில் உரிய உறுப்புரை 3 bis உள்வாங்கப்பட்டுள்ளமையினால் குறித்த நெநிமுறையின்பால் அணுகுவதில் தடையேதும் இல்லையென குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க,1984‑05‑10 ஆம் திகதியின்று மொன்றியலில் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்திற்கான திருத்தத்திற்குரிய நெறிமுறைக்கான அணுகலின் (உறுப்புரை 3 bis) பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.