• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்திட்டங்களை கல்வி முறைமைக்கு அறிமுகப்படுத்துதல்
- செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்திட்டங்களை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்துவது சம்பந்தமாக 2023‑10‑02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தேசிய திறமுறையினையும் திட்டமொன்றையும் தயாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள செயலணியினால் சமர்ப்பிக்கப்படும் சிபாரிசுகளுக்கு அமைவாக உத்தேச பாடநெறிகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க உரிய திறமுறை திட்டத்தின் அங்கமொன்றாக பொது கல்விக்கு உரியதாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த முன்னோடி கருத்திட்டம் Microsoft நிறுவனத்தின் ஒத்தாசையுடன் பின்வருமாறு நடைமுறைப்படுத்துவதற்கு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் கல்வி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போது Microsoft நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச பாடத்திட்டங்கள் தேசிய கல்வி நிறுவனத்தின் சிபாரிசுகளின் அடிப்படையில் திருத்தி தேவையான அடிப்படை மனித வளங்கள் நிலவும் பாடசாலைகளில் தரம் 08 இலிருந்து உத்தேச முன்னோடி கருத்திட்டத்தை ஆரம்பித்தல்.

* Microsoft நிறுவனத்தினால் வழங்கப்படும் வசதிகளின் மீது முன்னோடி கருத்திட்டம் சார்பில் தெரிவுசெய்யப்படும் பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தல்.

* தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிக்கும் 100 ஆசிரியர்களை Microsoft நிறுவனத்தினால் பயிலுநர்களாக பயிற்றுவித்தல்.