• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை திட்டமிடல் தொழிநுட்ப வல்லுநர் நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
- பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமிணி வலேபொட அவர்கள் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரனையொன்றாக இலங்கை திட்டமிடல் தொழிநுட்ப வல்லுநர் நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற நிலையியல் கட்டளை 52(6) ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சருக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.