• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக நகர்புற வீட்டு உரிமைகளின் கீழ் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களின் 50,000 வீடுகளுக்கு முழு உரிமையினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
- நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு களுக்கு அமைவாக நகர்புற வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வாடகை அறவிடலை இடைநிறுத்தி குறித்த மாடி வீட்டு அலகுகளுக்கான உரிமையினை சட்டபூர்வமாக குறித்த பயனாளி குடும்பங்களுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டி யுள்ளது. பல்வேறுபட்ட வீடமைப்பு கருத்திட்டங்களின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபை என்பனவற்றினால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வாடகை கொள்வனவு, தவணை முறை கொள்வனவு, இறையிலி மற்றும் வாடகை அடிப்படைகளின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, மாதாந்தம் 3,000/- ரூபா அல்லது அதற்கு குறைந்த பெறுமதியில் வாடகை அடிப்படையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நகர வீடமைப்பு அலகுகளுக்கான வாடகை அறவிடுதலை நிறுத்துவதற்கும் குறித்த வீடுகளின் இறையிலி உரிமையினை குறித்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உடைமையாக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.