• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தோலுடன்கூடிய முழுமையான மரமுந்திரிகையை இறக்குமதி செய்தல்
- நாட்டின் வருடாந்த தோலுடன்கூடிய முழுமையான மரமுந்திரிகையின் கேள்வியானது சுமார் 25,000 மெற்றிக்தொன்களாகும். ஆயினும் தற்போது உள்நாட்டில் 12,500 மெற்றிக்தொன்கள் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கிடைக்கப்பெறாமையினால் நாட்டில் மரமுந்திரிகை தொழிலின் நிலையான தன்மைக்கு இது சாதகமற்ற நிலைமையினை உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, நடப்பாண்டில் ஆகக்கூடுதலாக 15,000 மெற்றிக்தொன் தோலுடன்கூடிய முழுமையான மரமுந்திரிகையை இறக்குமதி செய்வதற்கும் அதன் பின்னர், உரிய அமைச்சுக்களின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் தீர்மானிக்கப்படும் தோலுடன்கூடிய முழுமையான மரமுந்திரிகையை எதிர்வரும் 04 ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு மரமுந்திரிகை அறுவடை கிடைக்கப்பெறாத திசெம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செய்வதற்குமாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.