• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1974 ஆம் ஆண்டின் கடலில் உயிர் காப்பிற்கான சர்வதேச சமவாயத்தின் (SOLAS) 1988 ஆம் ஆண்டின் வரைவேடு மற்றும் 2003 ஆம் ஆண்டு திருத்தப்பட்டவாறான 1966 ஆம் ஆண்டின் சரக்கு எடை வரம்பு மீதான சர்வதேச சமவாயத்தின் 1988 ஆம் ஆண்டின் வரைவேடு என்பன சார்பில் இணைதல்
- இலங்கை அரசாங்கம் கடந்த 40 வருடங்களாக 19 சமுத்திர சமவாயங்கள் மற்றும் வரைவேடுகளுக்கு செயல்வலுவாக்கம் அளித்து சமுத்திரம் சார்ந்த இனமொன்றாக இலங்கையின் விருத்திக்கு பெரும் பங்களிப்பினை பெற்றுக்கொண்டுள்ளது. உறுப்பு நாடுகள் சர்வதேச சமுத்தர அமைப்பின் சமவாயங்களுக்கு அமைவாக செயலாற்றுவது அத்தியாவசியமான தாகும் என்பதோடு, இந்த தேவையினை அடையும் பொருட்டு 1974 ஆம் ஆண்டின் கடலில் உயிர் காப்பிற்கான சர்வதேச சமவாயத்தின் 1988 ஆம் ஆண்டின் வரைவேடு மற்றும் 2003 ஆம் ஆண்டு திருத்தப்பட்டவாறான 1966 ஆம் ஆண்டின் சரக்கு எடை வரம்பு மீதான சர்வதேச சமவாயத்தின் 1988 ஆம் ஆண்டின் வரைவேடு என்பவற்றுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கு இயலுமாகும் வகையில் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த வரைவேடுகளுக்கு உரியதான ஒப்படைப்புகளுடன் உள்வாங்கப்பட வேண்டிய ஆவணங்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக உள்ளடக்கி குறித்த வரைவேடுகளில் இணையும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.