• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஐக்கிய அமெரிக்க குடியரசின் கமத்தொழில் திணைக்களத்தின் உதவியின் கீழ் இலங்கையில் சந்தை கூட்டமைப்பு ஊடாக சுய செயற்பாடு, எழுத்தறிவு மற்றும் கவனித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் கருத்திட்டம் ‑ கட்டம் II
- சந்தை கூட்டமைப்பு ஊடாக சுய செயற்பாடு, எழுத்தறிவு மற்றும் கவனித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்க குடியரசின் கமத்தொழில் திணைக்களம் மற்றும் Save The Children நிறுவனம் என்பவற்றுக்கு ஊடாக 26 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியமொன்றை 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டமானது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் முடிவடையவுள்ளதோடு, இந்த கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு Save The Children நிறுவனத்தினூடாக 32.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தில்" குறுகியகால வள பற்றாக்குறையை பூர்த்தி செய்தல், பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களின் எழுத்தறிவினை விருத்திசெய்தல், பாடசாலை மற்றும் சமூகம் தொடர்பான சிறந்த சுகாதாரம், துப்பரவேற்பாட்டினை மேம்படுத்துதல், உதவி முறைமைகளை பலப்படுத்துதல் மற்றும் நிலைபேறுடைய தன்மையின் பொருட்டு திறன் அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக்கொண்டு கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய தரப்பினர்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிகையினை செய்துகொண்டதன் பின்னர், உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.