• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்காக இலங்கையில் கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான திறமுறை
- பசுமை தொழில்முயற்சிகள், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரை பலப்படுத்தும் தொழில்முயற்சிகள் அடங்கலாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் வர்த்தக ரீதியில் சாத்தியமான வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முயற்சிகள் கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளாக அழைக்கப்படும். இலங்கையில் தற்போதுள்ள கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகள் சார்பில் போதுமான தகவல்கள், திறன் பயிற்சி, பங்களிப்பு, நிதி வசதி மற்றும் முறையான அங்கீகாரம் போன்றவற்றிற்கான அணுகுகை இல்லாமையின் காரணமாக குறித்த தொழில்முயற்சிகளின் விருத்தி மற்றும் அதன் ஊடாக ஏற்படும் சாதகமான தாக்கங்கள் வரையறுக்கப்படுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது. ஆதலால், கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்கும் போதும் வசதிகளை ஏற்பாடு செய்யும் போதும் தேசிய தொழில்முயற்சிகள், கைத்தொழில்கள், நிதி மற்றும் முதலீடு என்பவற்றுக்கு ஏற்புடையதான அரசாங்க கொள்கைகளில் கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கு ஏற்புடையதான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு விசேட திறமுறைகளின் தேவை எழுந்துள்ளன. அதற்கிணங்க, இலங்கை நிலைபேறுடைய அபிவிருத்தி சபையினால் ஆசிய பசுபிக் வலயத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக ஆணைக்குழுவின் வர்த்தகம், முதலீடு மற்றும் புத்தாக்க பிரிவின் ஒத்துழைப்புடன் உரிய சகல தரப்பினர்களினதும் கருத்துக்களைப் பெற்று "நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்காக இலங்கையில் கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான திறமுறையானது" தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திறமுறையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.