• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியினை பயன்படுத்தி இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் வலுசக்தி விநியோகத்தை நிலைப்படுத்தும் கருத்திட்டத்திற்காக யப்பான் அரசாங்கத்தின் கருத்திட்ட உதவி
- ஶ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் சூரிய வலுசக்தி உற்பத்தி முறைமைகளை தாபிப்பதன் மூலம் மின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் ஊடாக 1,230 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கருத்திட்ட உதவியினை (அண்ணளவாக 2.8 பில்லியன் ரூபா) வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சுகாதார துறையில் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியல்லா வலுசக்தி பாவனையை குறைத்தல், சுகாதார சேவை துறையின் மொத்த வினைத்திறனை அதிகரித்தல் மற்றும் நிலைபேறுடைய அபிவிருத்தியை மேம்படுத்துதல் இந்த கருத்திட்டத்தின் நோக்கங்களாகும். அதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.