• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை திருத்துதல்
- தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை பின்வரும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* அஸ்வெசும தகைமை பெறும் சமூக வகுதியினரிடையே ஆபத்தில் உள்ள சமூக வகுதியினருக்காக நலன்புரி நன்மைகள் உரித்தான செல்லுபடியாகும் காலத்தை 2024‑04‑01 ஆம் திகதியிலிருந்து 2024‑12‑31 ஆம் திகதி வரையும் இடைநிலை சமூக வகுதியினருக்காக (பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் குறைந்துள்ள) நலன்புரி நன்மைகள் உரித்தான செல்லுபடியாகும் காலத்தை 2024‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2024‑12‑31 ஆம் திகதி வரையும் நீடித்தல்.

* தற்போது இருக்கும் ஆபத்தான சமூக வகுதியினர் மற்றும் இடைநிலை சமூக வகுதியினர் (பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் குறைந்துள்ள) ஆகிய இரண்டு சமூக வகுதியினர்களையும் ஒன்றாக இணைத்து 8 இலட்சம் குடும்பங்களை ஆபத்தான வகுதியினராக 2024‑01‑01 ஆம் திகதியிலிருந்து கவனத்தில் எடுப்பதற்கும் அந்த குடும்பங்களுக்காக 5,000.00 ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை அன்றைய தினத்திலிருந்து 2024‑12‑31 ஆம் திகதி வரை செலுத்துதல்.

* தகவல்களை சான்றுப்படுத்தும் செயல்முறையின் பின்னர் அஸ்வெசும குடும்பங்களின் பட்டியலுக்கு உரித்தான காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500.00 ரூபாவும் அங்கவீனமுற்ற நபர்களுக்கு 7,500.00 ரூபாவும் முதியோருக்காக 3,000.00 ரூபாவும் 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக மாதாந்த கொடுப்பன வொன்றை செலுத்துதல்.

* தற்போது கொடுப்பனவுகளை பெறுகின்ற மற்றும் காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500.00 ரூபாவும் அங்கவீனமுற்ற நபர்களுக்கு 7,500.00 ரூபாவும் மற்றும் முதியோருக்கு 3,000.00 ரூபாவும் 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக அதிகரித்து இந்த கொடுப்பனவுகளை அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்திற்கு வௌிவாரியாக மாவட்ட செயலாளர்கள் / பிரதேச செயலாளர்கள் ஊடாக செலுத்துதல்.

* இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோருவதனை 2024 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஆரம்பித்து 2024 ஆம் ஆண்டு யூன் மாதத்திற்குள் நிறைவு செய்து யூலை மாதத்திலிருந்து கொடுப்பனவுகளைச் செய்தவதற்கும் மேலதிகமாக தகைமைகளை பெறும் குடும்பங்களைச் சேர்த்துக் கொள்வதற்காக உச்ச தகைமைபெறும் மொத்த குடும்ப அளவினை 2.4 மில்லியனாக திருத்துதல்