• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
முதலீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கூட்டுத்தாபனத்தை தாபித்தல்
- முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஒன்றிணைந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் முதலீட்டு மேம்பாட்டு வலயங்களைத் தாபித்தல் மற்றும் முகாமித்தல் என்பன பொருட்டு முதலீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கூட்டுத்தாபனம் என்னும் பெயரில் நியதிச்சட்ட நிறுவனமொன்றை தாபிப்பதற்கும் வீதி, மின்சாரம், நீர் மற்றும் வீடு போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை முதலீட்டு மேம்பாட்டு வலயங்களுக்கு வழங்கும் பொறுப்பினை இந்த கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.