• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் தாய்லாந்து இராச்சியத்தின் அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
- இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் விமானசேவைகள் உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு 2018‑06‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தாய்லாந்து தரப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள விமானசேவைகள் உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இரு நாடுகளுக்கும் இடையில் உத்தேச இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.