• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகளை திருத்துதல்
- காணித் துண்டுகளின் துணை பிரிவிடல், சில காணித் துண்டுகளின் பயன்பாட்டினை மாற்றுதல் மற்றும் தொழிநுட்ப ரீதியிலற்ற திருத்தங்கள் சிலவற்றை உள்ளடக்கி 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளததார ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாம் வௌியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகளை திருத்தி 2023‑11‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2358/70 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கட்டளைகள் வௌியிடப்பட்டுள்ளன. இந்த கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.