• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இறக்குமதி செய்யப்படும் பால்மா சார்பில் 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தி வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 10 சதவீத வரியினை விதித்து 2023‑09‑21 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுக்கு வரத்தக்கதாக பெறுமதி சேர்க்கப்டப்ட வரியை 15 சத வீதத்திலிருந்து 18 சத வீதம் வரை அதிகரிப்பதற்கு உரியதாக 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2023‑12‑19 ஆம் திகதியன்று வௌியிடப்பட்ட நியதி என்பவற்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.