• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துதல்
- வங்கி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வங்கியின் உரிமை, கூட்டு மேற்பார்வை, மூலதனம், திரவ கட்டமைப்பு, வழங்கக்கூடிய உச்ச கடன் வசதிகளின் அளவு மற்றும் தொடர்புபட்ட தரப்பினர்களுனான கொடுக்கல் வாங்கல், நல்லாட்சித் தேவை, அரசாங்க வங்கிகளின் ஒழுங்குறுத்துகை மற்றும் மேற்பார்வை போன்ற துறைகளில் நிலவும் ஒழுங்குறுத்துகை நியமங்களை பலப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்தும் பொருட்டு 2023‑06‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.