• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை (உலர், பச்சை மற்றும் பிற உணவு பொருட்கள்) வழங்குவதற்கான பெறுகை
- 2024 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை (உலர், பச்சை மற்றும் பிற உணவு பொருட்கள்) வழங்குவதற்கான பெறுகையை 84.2 பில்லியன் ரூபாவைக் கொண்ட (வற் இன்றி) மொத்த பெறுமதிக்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வழங்குநர்களுக்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.