• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
Bill and Melinda Gates மன்றத்தின் மூலம் சனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்படவுள்ள கொள்கை ரீதியிலான ஒத்துழைப்பு
- சனாதிபதி செயலகமானது கொள்கை ரீதியிலான விடயங்களுக்கு வழிகாட்டும் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்பார்வை செய்யும் நோக்கங்களை நிறைவேற்றி நடைமுறையிலுள்ள மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் முக்கிய பணியினை நிறைவேற்றுகின்றது. இதன்போது முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி, உலக வங்கியின் அபிவிருத்தி கொள்கை கையாள்கை நிகழ்ச்சித்திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை உதவிப் நிகழ்ச்சித்திட்டம் போன்ற பல்தரப்பு நிறுவனங்கள் பலவற்றுடன் ஒருங்கிணைப்பினை பேணியும் அதேபோன்று பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் தனியார் துறை தரப்பினர்களுடன் இணைந்து செயலாற்றியும் வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்குரியதாக சனாதிபதி செயலகத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு நிகழ்ச்சித்திட்ட உதவி பிரிவொன்றைத் தாபித்து இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பினை நல்கும் பங்காளிகளாக செயலாற்றுவதற்கு உலகின் மிகப்பெரிய அறக்கட்டளை மன்றங்களில் ஒன்றான Bill and Melinda Gates மன்றத்தினால் தாபிக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பொன்றாகிய Global Health Strategies மற்றும் இந்த நிறுவனத்தின் உள்நாட்டு பங்காளராகிய Connect To Care அமைப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளன. Bill and Melinda Gates மன்றத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்தாசை நல்குவதற்காக நடைமுறைப்படுத்தும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்ங்களை முறையாக செயற்படுத்தும் பொருட்டு தேவையான ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்கு சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட நிறைவேற்றுக் குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது. Bill and Melinda Gates மன்றத்தினால் சனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்படவுள்ள கொள்கை ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பில் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இது சம்பந்தமாக தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.