• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சர்வதேச தேரவாத நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
- சர்வதேச தேரவாத நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலமானது தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையொன்றாக முன்னாள் சனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய சட்டமூலமானது சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. பாராளுமன்ற நிலையியல் கட்டளை 52(6) ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் சட்டமூலத்தை சிபாரிசு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.