• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நாணயமாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- நடைமுறையிலுள்ள 1927 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாணயமாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதோடு, சில ஏற்பாடுகள் காலம் கடந்தவையுமாகும். ஆதலால், பயன்படுத்தக்கூடிய சட்டபூர்வ ஆவணங்கள் சம்பந்தமாக சட்டத்தினை தௌிவுபடுத்துவதற்கும் விருத்தி செய்வதற்குமாக நாணய மாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்திற்கு செய்யப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்கு சனாதிபதி சட்டத்தரணி திரு.நிஹால் ஜயவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு 1927 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாணயமாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநகருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.