• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நுண்ணுயிர் எதிர்ப்புடன் போராடும் தேசிய திறமுறை திட்டம் 2023 - 2028 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஐக்கிய இராச்சிய பிளெமிங் நிதியத்தின் ஒத்தாசையினைப் பெற்றுக்கொள்ளல்
- மனித இனம் எதிர்கொண்டுள்ள பிரதான 10 பொது சுகாதார அனர்த்தங்களில் ஒன்றாக நுண்ணுயிர் எதிர்ப்பு இனங்கணாப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு தாக்கத்தின்மீது மருந்து எதிர்ப்பு பற்றீறியாவால் வருடாந்தம் நேரடியாக சுமார் 1.27 மில்லியன் மரணங்கள் நிகழ்கின்றதெனவும் மருந்து எதிர்ப்பு பற்றீறியா சார்ந்து வருடாந்தம் சுமார் 4.95 மில்லியன் மரணங்கள் நிகழ்கின்றதெனவும் உலக சுகாதார அமைப்பு 2019 ஆம் ஆண்டில் மதிப்பிட்டுள்ளது. இவற்றை விட நுண்ணுயிர் எதிர்ப்பானது நாடுகளுக்கு கணிசமான பொருளாதார செலவினை ஏற்படுத்துகின்றமை பற்றியும் உலக சுகாதார அமைப்பு இனங்கண்டுள்ளது. இந்த நிலைமையின் மீது ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு திணைக்களத்தினால் முகாமிக்கப்படும் பிளெமிங் நிதியத்தின் கொடை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள சுமார் 25 நாடுகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்புபட்ட பணிகளை செய்யும் பொருட்டு ஒத்தாசை வழங்குகின்றது. இந்த கொடை நிகழ்ச்சித்திடத்தின் கீழ் பிளெமிங் நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு, நுண்ணுயிர் எதிர்ப்புடன் போராடும் தேசிய திறமுறை திட்டம் 2023 - 2028 ஐ நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.