• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Latter-day Saint Charities (LDSC) அமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கை
- முள்ளந்தண்டு காயமடைந்தவர்களுக்கான விசேட சக்கர நாற்காலி பெற்றுக்கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Latter-day Saint Charities (LDSC) அமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்கனவே சக்கர நாற்காலிகளும் வேறு உதவி உபகரணங்களும் நன்கொடையாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலப்பகுதியில் முகங்கொடுத்த கடும் புற்றுநோய் மருந்து பற்றாக்குறையினை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு சுகாதார அமைச்சினால் செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில் குறித்த 13 மருந்து வகைகளும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களின் ஊடாக நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதற்கு Latter-day Saint Charities (LDSC) அமைப்பு அதன் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க முறையான நடவடிக்கை முறையினை பின்பற்றி உரிய நன்கொடைகளை ஏற்பது சம்பந்தமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.