• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “Sustainable Consumption and Production Outreach” கருத்திட்டத்தின் கீழ் தொழிநுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்தல்
- ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 12 ஆவது நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கமாக இனங்காணப்பட்டுள்ள "நிலைபேறுடைய உற்பத்தி மற்றும் நுகர்வு முறையினை உறுதிப்படுத்துதல்" என்பதன் கீழான 7 ஆவது நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்காக "தேசிய கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக நிலைபேறுடைய அரச பெறுகை செயற்பாடுகளை மேம்படுத்துதல்" என்பது உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த குறியிலக்கினை வெற்றிக்கொள்ளும் பொருட்டு அரசாங்க பெறுகை செயற்பாட்டிற்கு பசுமை ஆக்கக்கூறினை முறையாகவும் அளவீட்டு ரீதியிலும் உள்வாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட தேசிய பசுமை பெறுகை கொள்கைக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த பசுமை உற்பத்திகள் மற்றும் சேவைகளை இனங்காண்பதற்கு வசதியளிப்பதற்கும் சந்தையில் போலியான பசுமைமயப்படுத்தலை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட சுற்றாடல் அடையாளப்படுத்தல் தொடர்பான தேசிய கட்டமைப்புக்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பினால் சில ஆசிய நாடுகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள “Sustainable Consumption and Production Outreach” கருத்திட்டத்தின் கீழ் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கு உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சுற்றாடல் அமைச்சுக்கும் ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தல் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.