• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை - தலாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- விநியோக ஆற்றலை விருத்திசெய்தல், ஏற்றுமதியினை நோக்காகக்கொண்ட வௌிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் இலங்கையின் பொருட்கள் உட்பட சேவைகளுக்கான சர்வதேச சந்தை அணுகளை விரிவுபடுத்துதல் என்பன இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமாக பின்பற்றவேண்டிய திறமுறையாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ASEAN அமைப்பில் பாரிய பொருளாதாரத்தையும் வௌிவாரி முதலீடுகளையும் மேற்கொள்ளும் அரசொன்றான தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் 2018‑01‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் போது தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவினால் உரிய சகல தரப்பினர்களுடனும் கருத்து பரிமாறல்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் தலாய்லாந்து ஆகிய இருதரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டினை விருத்திசெய்தல், உள்நாட்டு சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கான உடன்பாடு உட்பட அறிவு பரிமாற்றலை எளிமையாக்கல் அடங்கலாக பின்னணி மற்றும் இணைப்புகள் அடங்கிய 14 அத்தியாயங்கள் கொண்ட முழுமையான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, உத்தேச இலங்கை - தலாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.