• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
டொரிங்டன் ஹொக்கி மைதானம் அபிவிருத்தி கருத்திட்டம்
- டொரிங்டனில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஹொக்கி மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த மைதானத்தின் புற்தரையின் காலம் கடந்துள்ளதன் விளைவாகவும் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளமையினாலும் விளையாடுவதற்கு பொருத்தமற்ற நிலைமையில் காணப்படுகிறது. குறித்த மைதானத்திற்கான செயற்கை புற்தரையை இலவசமாக வழங்குவதற்கு ஆசிய ஹொக்கி சம்மேளனம் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, டொரிங்டன் ஹொக்கி மைதானத்திற்குத் தேவையான புற்தரையினை ஆசிய ஹொக்கி சம்மேளனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் குறித்த மைதானத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்வதற்குமாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.