• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023 நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (வழக்கு சான்று பொருட்களை அகற்றுதல்) பற்றிய கட்டளை
- நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளை சட்டத்தின் 77அ ஆம் பிரிவின் (6) ஆம் உபபிரிவின் கீழ் ஔடதம், பதார்த்தம், பொருள் அல்லது தயாரிப்பு உட்பட வழக்கு சான்று பொருட்களை அகற்றும் முறைமையை நீதி சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் கட்டளைகளின் மூலம் விதித்துரைப்பதற்கு நீதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு தத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட நியதிகளுக்கு அமைவாக ஔடதம், பதார்த்தம், பொருள் அல்லது தயாரிப்பு உட்பட வழக்கு சான்று பொருட்களை அகற்றும் பொறிமுறையினை விதித்துரைத்து 2023-11-27 ஆம் திகதியிடப்பட்டதும் 2360/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வௌியிடப்பட்டுள்ள, 2023 நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (வழக்கு சான்று பொருட்களை அகற்றுதல்) பற்றிய கட்டளையை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.