• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
யப்பான், டோக்கியோ ‑ நரிட்டா விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. கம்பனியின் விமானங்கள் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- யப்பான், டோக்கியோ ‑ நரிட்டா விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. கம்பனியின் விமானங்கள் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளை வழங்குவதற்குப் பொருத்தமான சேவை வழங்குநர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச கேள்வி வழிமுறையினைப் பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளது. அதன் பொருட்டு 02 விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த அனுசரணையான விலைகளை முன்வைத்துள்ள International Air Cargo Terminal Co. Ltd., கம்பனிக்கு 2024‑08‑01 ஆம் திகதி தொடக்கம் 2027‑07‑31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு டோக்கியோ ‑ நரிட்டா விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.