• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கஸகஸ்தான் அஸ்தானாவில் இலங்கை தூதரகமொன்றைத் தாபித்தல்
- கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவினை மேலும் விருத்தி செய்வதை நோக்காகக்கொண்டு, கஸகஸ்தான் அஸ்தானாவில் இலங்கை தூதரகமொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. ஆசியாவில் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டு செயலகம் (CICA) கஸகஸ்தானில் அமைந்துள்ளமையினாலும் இலங்கை குறித்த மாநாட்டு செயலகத்தின் உறுப்பு நாடாக இருப்பதானாலும் மத்திய ஆசிய வலயத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது. அதேபோன்று கஸகஸ்தானிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி காணப்படுகின்றமையினால் இலங்கை தூதரகமொன்றை அஸ்தானாவில் தாபிப்பது இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும். அதற்கிணங்க, உத்தேச தூதரகத்தை கஸகஸ்தான் அஸ்தானாவில் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.