• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
புதிய முதலீட்டு வலயங்களைத் தாபித்தல்
- ஏற்றுமதியினை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கிடையில் கூட்டு பொறிமுறையொன்றைத் தயாரிக்கும் தேவை 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் வலியுறுத்தப்பட்டது. அதற்கிணங்க பின்வருமாறு புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்யும் பொருத்தப்பாடு இனங்காணப்பட்டுள்ளது.

* வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் புதிய முதலீட்டு வலயங்களைத் தாபித்தல்.

* மாங்குளம், பரந்தன், இரசாயண கம்பனி வளாகத்திலும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலும் அமைந்துள்ள பிரதேசங்களில் புதிய முதலீட்டு வலயங்களைத் தாபித்தல்.

* இரனவில மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் புதிய முதலீட்டு வலயங்களைத் தாபித்தல்.

* பிங்கிரிய மற்றும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயங்களை மேலும் விரிவுபடுத்துதல்.

உத்தேச பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்'ளது. அதற்கிணங்க, பொருத்தமான அரசாங்க தனியார் பங்குடமை மாதிரியினை அடிப்படையாகக் கொண்டு குறித்த முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.