• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
விஞ்ஞான, தொழிநுட்ப பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல்
- புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழிநுட்ப புத்தாக்கங்கள் மற்றும் நிலைபேறுடைய அபிவிருத்தி போன்ற முக்கிய பிரிவுகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு திறமையான தொழில்சார்பாளர்களை உருவாக்கும் அடிப்படையினை தயாரிக்கும் நோக்கில் ஐக்கிய அமெரிக்க குடியரசின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றின் ஒத்தாசையினைப் பெற்று விஞ்ஞான, தொழிநுட்ப பல்கலைக்கழகமொன்றைத் தாபிக்கும் பொருத்தப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய பல்கலைக்கழகமொன்றின் மூலம் அதி நவீன வழிமுறைகளை பயன்படுத்துவதுவதற்கும் உலகளாவிய கற்கை தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான அடிப்படை சூழலை உருவாக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். UC Berkeley, UC Riverside, UC Davis, University of Michigan போன்ற பல்கலைக்கழகங்கள் அடங்கலாக இனங்காணப்படும் சில பல்கலைக்கழகங்களிலிருந்து பங்குடமை பல்கலைக்கழகமொன்றைத் தெரிவு செய்து குறித்த பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்க தனியார் பங்குடமையாக உத்தேச விஞ்ஞான, தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.