• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அநுராதபுரம் மஹா விகாரை அபிவிருத்தி திட்டம்
- அநுராதபுரம் மஹா விகாரை இலங்கையின் மத மற்றும் வரலாற்று ரீதியில் விசேட பெறுமதியுடன்கூடிய பிரதேசமொன்றாகையினால், அநுராதபுரம் மஹா விகாரையின் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை முறையாகவும் திட்டவட்டமான காலப்பகுதியிலும் நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மஹா விகாரை ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பாதுகாப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களின் அறிவிப்பின் மீது தொல்பொருளியல் துறையில் சர்வதேச அனுபவமிக்க வௌிநாட்டு நிபுணர் ஒருவரான பேராசிரியர் (திரு) ரொபின் கனின்ஹம் கருத்திட்ட அறிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்தக் கருத்திட்ட அறிக்கையின் மூலம் 2024 ஆம் ஆண்டிலிருந்து 2029 ஆம் ஆண்டு வரையிலான 06 வருட காலப்பகுதிக்குள் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. பேராசிரியர் (திரு) ரொபின் கனின்ஹம் அவர்களின் கருத்திட்ட அறிக்கைக்கு அமைவாக மஹா விகாரை ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பாதுகாப்பு பணிகளை தொல்பொருளியல் திணைக்களத்தின் மத்திய கலாசார நிதியத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் சனாதிபதி செயலகத்தினாலும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினாலும் கூட்டாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.