• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சர்வதேச A2P (Application‑to‑Person) குறுஞ் செய்திகள் சேவை டிஜிட்டல் மையத்தை செயற்படுத்துதல்
- A2P என்பது தொடர்பாடல் மாதிரியாகும். பொது மக்கள் அல்லது இறுதியாக பரிசீலனை செய்யப்படுபவருக்கு செய்தி அல்லது அறிவிப்பதற்காக தொடர்புபடுத்தும் கணனி நிகழ்ச்சித்திட்டமொன்று அல்லது மென்பொருள் போன்ற ஒரு பிரயோகமாகும். குறுஞ் செய்தி சேவை முறையானது பொது மக்கள், தொழில்முயற்சிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கான முக்கிய தொடர்பாடல் ஊடகமொன்றாக வர்த்தகம் மற்றும் கொடுக்கல் வாங்கல் பற்றிய மதிப்பீடு உட்பட பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த செய்திகள் குறுஞ் செய்திகளாக பல் ஊடக செய்திகளாக அல்லது வேறு விதத்திலான செய்திகளாக ஆள் ஒருவர் நடமாடும் கருவியொன்றுக்கு பிரயோகமொன்றின் அல்லது முறைமையொன்றின் ஊடாக வௌியிடுவார். குறுஞ் செய்தி சேவையை பரவலாக பயன்படுத்துவதன் மூலம் முறைகேடுகள், Spam மற்றும் அத்துமீறிய செயற்பாடுகள் நடைபெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு குறுஞ் செய்தி பரிமாற்றலை ஒழுங்குறுத்துவதற்கு மையப்படுத்தப்பட்ட குறுஞ் செய்தி சேவை வலையமைப்பு பாதுகாப்பு தீர்வொன்று இருக்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஐக்கிய இராச்சியத்தை தளமாக கொண்ட தனியார் கம்பனியொன்றான Infobip நிறுவனத்தினால் சர்வதேச A2P (Application‑to‑Person) குறுஞ் செய்திகள் சேவை டிஜிட்டல் மையத்தை செயற்படுத்துவதற்கான பிரேரிப்பானது முன்வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த பிரேரிப்பினை மதிப்பிட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகைகள் ஆணைக்குழு ஆகிய நிறுவங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொழிநுட்ப குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.