• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் (e ‑ கிராம உத்தியோகத்தர் தகவல் முறைமை) ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துதல்
- 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் தொழிநுட்ப அமைச்சரினால் தயாரிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் (e ‑ கிராம உத்தியோகத்தர் தகவல் முறைமை) ஒழுங்குவிதியானது 2022‑12‑22 ஆம் திகதியிடப்பட்டதும் 2311/40 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக உரிய மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கு இலத்திரனியல் ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் அறிக்கைகளை உபயோகப்படுத்தும் வசதிகள் செய்யப்படும். இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.