• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
திருகோணமலை சீனக் குடாவின் மேற்பகுதியிலுள்ள தாங்கி தொகுதியில் 61 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் கையளித்தல் எனும் வணிக மாதிரியின் கீழ் அபிவிருத்தி செய்தல்
- திருகோணமலை சீனக் குடாவின் மேற்பகுதியிலுள்ள தாங்கி தொகுதியானது 99 எண்ணெய் களஞ்சிய தாங்கிகளை கொண்டுள்ளதோடு, 2022‑01‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு அதிலிருந்து 61 தாங்கிகள் Trinco petroleum Terminal (Pvt) Ltd கம்பனிக்கு 50 வருட கால குத்தகைக்களிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியதகவாய்வினை மேற்கொள்தல் உட்பட ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சாத்தியதகவாய்வின் மூலம் குறித்த கருத்திட்டத்தை 16 வருடங்களில் 7 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, முதலாம் கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பயனுள்ள 9 தாங்கிகளை மறுசீரமைப்பதற்கும், அண்ணளவாக 1.75 கி.மீ நீளம் கொண்ட குழாய் வழியொன்றை நிர்மாணிப்பதற்கும் அதற்குரிய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் கையளித்தல் எனும் வணிக மாதிரியை பின்பற்றுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க முதலாம் கட்டத்தின் கீழ் செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பெறுகை செயற்பாட்டினை பின்பற்றுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.