• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நியூசிலாந்து வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தாபித்தல்
- நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் விருத்தி செய்யும் ​நோக்கில் நியூசிலாந்து வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயமொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.