• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் விளையாட்டுத் துறை ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு 2021‑07‑11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அதன் பின்னர், குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு திருத்தங்கள் சில முன்வைக்கப்பட்டதன் காரணமாக எதிர்பார்ககப்பட்டவாறு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு முடியாமற் போனது. குறித்த திருத்தங்களை உள்ளடக்கி மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.