• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் சமுத்திர நாடுகளின் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கை
- ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அரசாங்கமும் வட அயர்லாந்து அரசாங்கமும் தற்போது கடல் சார்ந்த ஆரோக்கிய செயற்பாடுகள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் தலைமைவகித்து வருகின்றன. அதற்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய கடற்பரப்பில் ஆகக்குறைந்தது 30 சதவீதத்தை பாதுகாப்பதற்கும் கடல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறுடைய நீல பொருளாதாரத்தை அடைவதற்குமாக 500 மில்லியன் யுரோ பெறுமதிமிக்க "Blue Planet” நிதியத்தை தாபிப்பதற்கும் பங்களிப்பு நாடுகளுக்கு இதன்மூலம் தேவையான நிதியினை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் சுற்றாடல், உணவு, கிராமிய அலுவல்கள் திணைக்களத்தினால் "Blue Planet” நிதியத்தின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காக இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்திலான பல நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றான சமுத்திர நாடுகளின் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உதவி வழங்குவதற்கு பொருத்தமான நாடொன்றாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சமுத்திர நாடுகளின் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஒத்துழைப்பின் பொருட்டு ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு உரிய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் வௌிநாடடு வளங்கள் திணைக்களத்திடமிருந்து கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.