• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையில் தொழிற்பயிற்சி II ஆம் கட்ட கருத்திட்டம் சார்பில் ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் தொழில்நுட்ப உதவியினைப் பெற்றுக்கொள்தல்
- இலங்கையில் தொழிநுட்ப, வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் "இலங்கையில் தொழிற்பயிற்சி II ஆம் கட்ட கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு 2023 - 2026 காலப்பகுதியின் சார்பில் 7 மில்லியன் யூரோக்கள் கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசு சார்பில் நடைமுறைப்படுத்தும் முகவராண்மையாக GIZ நிறுவனம் செயலாற்றும். உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு GIZ நிறுவனத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதோடு, வரைவு உடன்படிக்கைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய திடடமிடல் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் அவதானிப்புரைகளும் சட்டமா அதிபரின் உடன்பாடும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க, உத்தேச உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.