• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
TIQRI SOFWARE PTE. LTD. நிறுவனத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
- TIQRI SOFWARE PTE. LTD. நிறுவனத்தினால் 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட ஆரம்ப நேரடி வௌிநாட்டு முதலீட்டுடன் தகவல் தொழிநுட்பம் பற்றிய தொழில்முயற்சியொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் ஆரம்பிக்கும் பொருட்டு பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்முயற்சிகளுக்கு விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்குதல் தொடர்பிலான வழிகாட்டல்) ஒழுங்குவிதிகளின் 2(ஆ) வின் கீழ் இந்த கருத்திட்டத்திற்கு விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதற்கான தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதற்கிணங்க இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் உரிய விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பினை வழங்குவதற்கும் இந்தக் கருத்திட்டத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சியொன்றாக வர்த்தமானியில் கட்டளையொன்றின் மூலம் பிரசுரித்து அதன் பின்னர், குறித்த கட்டளையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.