• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அணு மற்றும் ஏனைய கதிரியக்க பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- அணு மற்றும் ஏனைய கதிரியக்க பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாக இலங்கை அணுசக்தி ஒழுங் குறுத்துகை சபை, இலங்கை அணுசக்தி சபை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய திடடமிடல் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் அவதானிப்புரைகளும் சட்டமா அதிபரின் உடன்பாடும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.