• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் துருக்கி விண்வௌி நிறுவனத்திற்கும் (Trukish Aerospace Inc.) இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் துருக்கி விண்வௌி நிறுவனத்திற்கும் (Trukish Aerospace Inc.) இடையில் மனிதவளங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் துருக்கி விண்வௌி நிறுவனத்தின் சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பயிற்சியாளர் ஒருவராக கலந்துகொள்வதற்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறுவததோடு பல நன்மைகளும் கிடைக்கப்பெறும். அதற்கிணங்க, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.