• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SLTFTA)
- உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான 9 ஆவது சுற்று கலந்துரையாடல் 2023‑12‑18 ஆம் திகதியிலிருந்து 2023‑12‑20 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்பட்டது. தற்போது உரிய கலந்துரையாடல்கள் பூர்த்தியடைந்துள்ளதோடு, சட்ட மற்றும் நிறுவன ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாட்டு குழுக்களுக்கு சட்ட ரீதியில் பரிசீலிப்பதற்காக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் சுங்கத்தீர்வை தளர்த்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் உணர்திறன் பட்டியலில் வகுப்பீடு செய்யப்பட்ட HS குறியீடு மீது ஏற்புடைத்தாகும் திரட்டிய சுங்கத் தீர்வையிலிருந்து 50 சதவீதத்தை உடன்படிக்கை அமுலுக்குவந்த திகதியிலிருந்து 16 ஆவது வருட ஆரம்பத்தில் ஒரே தடவையில் நீக்குவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கும் அதற்கிணங்க, சுங்கத்தீர்வை தளர்த்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கால வரையறையை 18 வருடங்களிலிருந்து 16 வருடங்களாக குறைப்பதற்கும் 9 ஆவது சுற்று கலந்துரையாடலின் போது இருதரப்பும் உடன்பாடு கண்டுள்ளது. குறித்த உடன்பாட்டின் பிரகாரம் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.