• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கான விசாரணை நியதிகள் மற்றும் செயலணியொன்று தாபிக்கப்படுதல்
- வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு குழு உரிய அரசாங்க நிறுவனங்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், ஒழுங்குறுத்துகை அதிகாரபீடங்கள் மற்றும் வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர்களின் முகவராண்மை என்பவற்றைக் கொண்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை முறைப்படுத்தும் பொருட்டு இந்த குழுவுக்கான விசாரணை நியதிகள் வரையப்பட்டுள்ளன. வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுக்கும் போது எழும் பிரச்சினைகள் சார்பில் தீர்வுகளை கண்டறியும் போது அரசாங்க நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஒழுங்குறுத்துகை அதிகாரபீடங்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கும் இடையில் பயனுள்ள ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கு செயலணியொன்றை தாபிப்பது அத்தியாவசியமானதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கான விசாரணை நியதிகள் சார்பிலும் செயலணியொன்றை தாபிப்பதன் சார்பிலும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.