• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தனியார் துறையின் மூலம் கீரி சம்பா அரிசிக்கு சமமான GR 11 வகை அரிசி 50,000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல்
- சந்தையில் அரசியின் விலையினை கட்டுப்படுத்துவதற்கு உணவு கொள்கை குழுவின் சிபாரிசின் பிரகாரம் 50,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு 2023‑11‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உள்நாட்டு சந்தையில் கீரி சம்பா அரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகளில் போட்டியினை உருவாக்கி விலையில் காணப்படும் நலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கீரி சம்பா அரிசிக்கு சமமான GR 11 வகை அரிசி 50,000 மெட்ரிக் தொன் தனியார் துறையின் ஊடாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.