• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
டிஜிட்டல் மாற்றத்திற்கான நிறுவன சீர்திருத்தங்கள்
- இலங்கையில் டிஜிட்டல் அபிவிருத்தியின்பால் மிக பயனுள்ள வகையில் செயலாற்றுவதற்கும் அதன் பெறுபேறுகளை அடைவதற்கும் பரந்துபட்ட அதிகாரங்களுடன்கூடிய நிறுவனமொன்றை தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்கத்தின் டிஜிட்டல் அபிவிருத்தி செயற்பாட்டினை நெறிப்படுத்துவதற்கு திறமுறை ரீதியிலானதும் கொள்கை ரீதியிலானதுமான தலைமைத்துவத்தை வழங்குதல், முதலீட்டு ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பன பொருட்டு டிஜிட்டல் அபிவிருத்தி முகவராண்மையினை தாபிப்பதற்கும் தேசிய செயற்கை புலனாய்வு திறமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு டிஜிட்டல் அபிவிருத்தி முகவராண்மையின் பிரிவொன்றாக செயற்கை அறிவு சார்ந்த தேசிய நிலையமொன்றை தாபிப்பதற்கும் இயலுமாகும் வகையில் 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழிநுட்ப சட்டத்திற்குத் தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க, திருத்த சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.